செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு சதுர கணக்கில் வாடகை வசூலிக்கும் முறையை ரத்துசெய்து பகுதி முறையை அமல்படுத்தக்கோரி 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கோயில் நிலங்களில் குடியிருப்போர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், சதுர கணக்கில் சந்தை மதிப்பில் வாடகையை நிர்ணயிப்பதை ரத்து செய்து பகுதி முறையை அமல்படுத்த வேண்டும், கலைஞர் போட்ட அரசாணை எண்:298 மற்றும் அரசாணை 456 தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
குறைபாடுகள் உள்ள அரசு ஆணையம் 34ஏஐ ரத்து செய்ய வேண்டும், எந்த நிபந்தனையும் கூறாமல் பெயர் மாற்றம் செய்துத்தர வேண்டும். மேலும், மின் இணைப்பு வழங்க வேண்டும், இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றங்களை பொது நீதிமன்றங்களாக மாற்றம் செய்ய வேண்டும். நீண்ட காலமாக குடியிருந்து வருபவர்களுக்கு குடியுரிமை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
The post வாடகை வசூலை பகுதி முறையாக அமல்படுத்தக்கோரி கோயில் நிலங்களில் குடியிருப்போர் ஆர்ப்பாட்டம்: செங்கல்பட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.