செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் ஊராட்சியில் உள்ளது பாளையார் மடம் பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், சுமார் 15 வருடங்களுக்கு முன்பு 800 மீட்டர் தூரத்திற்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியிடங்களுக்கு செல்ல இந்த சிமென்ட் சாலைையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த சிமென்ட் சாலையானது நாளடைவில் பழுதாகி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், இச்சாலை வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் ஏற்பட்டிருக்கும் பள்ளத்தை கவனிக்காமல் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும், மழைக்காலங்களின்போது சாலையில் தண்ணீர் தேங்கி, முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, இப்பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பாளையார் மடம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை appeared first on Dinakaran.