காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் நடுத்தெரு பகுதியில் அனாதிருத்திரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், கடந்த 15 ஆண்டாகளாக பள்ளி மாணவ – மாணவிகளை ஒழுங்கு நெறிமுறைபடுத்தும் வகையில், ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் என்பவரால், பள்ளி மாணவ – மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை கற்று கொடுக்கப்பட்டு மார்கழி மாதத்தில் பஜனைகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இவ்வாண்டுக்கான மார்கழி மாதம் நேற்று தொடங்கியநிலையில் பள்ளி மாணவ – மாணவிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது அதிகாலை வேலையிலேயே எழுந்து நீராடி அனாதிருத்திரேஸ்வரர் கோயிலிருந்து புறப்பட்டு திருப்பாவை, திருவெம்பாவை பஜனை பாடல்களை பாடி பல்வேறு வீதி வழியாக சென்று பஜனை பாடல்களை பாடி வருகின்றனர்.
The post காஞ்சி பிள்ளையார் பாளையம் பகுதியில் பள்ளி சிறுவர்களின் திருப்பாவை பஜனை appeared first on Dinakaran.