பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுடனான 3வது டெஸ்டின் 2வது நாளில் இந்திய நட்சத்திரப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை ‘மிக கொடிய மிருகம்’ என்ற பொருள்பட இன ரீதியாக விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை இஸா குஹா மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து இஸா கூறுகையில், ‘பும்ரா எதிரணி வீரர்களுக்கு மிகவும் ஆபத்தான பந்து வீச்சாளர் என்ற பொருளில்தான் விமர்சனம் செய்திருந்தேன். அதை பலர் தவறாக புரிந்து கொண்டனர். இருப்பினும், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். இதையடுத்து, இஸாவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
The post பும்ராவை விமர்சித்த வீராங்கனை மன்னிப்பு appeared first on Dinakaran.