×

காயத்தால் விலகிய ஆப்கானிஸ்தான் வீரர்

ஹராரே: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு நாடுகளும் மோதுகின்றன. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ் காயம் காரணமாக ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதில் முகம்மது இஷாக் ஆடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஆப்கானிஸ்தான் அணியின் முஜிபுர் ரஹ்மானுக்கும் ஓய்வு தரப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரில் ரஹ்மானுல்லாவின் ஆட்டம் குறிப்படும்படி இல்லை. 3 போட்டிகளிலும் சேர்த்து அவர் 26 ரன்களே எடுத்தார்.

The post காயத்தால் விலகிய ஆப்கானிஸ்தான் வீரர் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Harare ,Zimbabwe ,T20 ,Rahmanullah Gurfaz… ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவம்...