பிரிஸ்பேன்: பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. பிரிஸ்பேனில் பெரும்பாலான நேரங்களில் மழை குறுக்கிட்டதால் பல முறை ஆட்டம் தடைபட்டது. 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 445 ரன், இந்தியா 260 ரன்னில் ஆட்டமிழந்தன.
ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழந்து 89 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. 275 ரன் இலக்குடன் இந்திய அணி விளையாடியபோது மழை குறுக்கிட்ட நிலையில் ஆட்டநேரம் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் டிராவிஸ் ஹெட் 152 ரன், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்சில் இந்திய வீரர் பும்ரா 6 விக்கெட், சிராஜ் 2 விக்கெட், ஆகாஷ் தீப், நிதிஷ் ரெட்டி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
The post பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா..!! appeared first on Dinakaran.