ஹாமில்டன்: இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டின் 4ம் நாள் ஆட்டத்தில், 423 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி மகத்தான வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அங்கு 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 2 டெஸ்ட்களில் முறையே, 8 விக்கெட், 323 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. அதனால் தொடரில்2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் 3வது டெஸ்ட் ஹாமில்டனில் டிச.14ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் நியூசி 347 ரன் குவிக்க, இங்கி 143 ரன்னிலேயே சுருண்டது. தொடர்ந்து ‘பாலோ ஆன்’ தராமல் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசி, கேன் வில்லியம்சன் அதிரடி சதம் காரணமாக 453 ரன் குவித்தது. அதனையடுத்து 2வது இன்னிங்சை விளையாடிய இங்கி 3வது நாளான நேற்று முன்தினம் முடிவில் 2 விக்கெட் இழப்பு 18 ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த ஜேகப் பெதேல் 9, ஜோ ரூட் 0 ரன்னுடன் நேற்று 2வது இன்னிங்சை தொடர்ந்தனர்.
பொறுப்புடன் ்விளையாடி அரைசதங்கள் விளாசிய இருவரும் 3வது விக்கெட்டுக்கு 104ரன் விளாசினர். பெதேல் 76, ரூட் 54ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் கஸ் அட்கின்சன் மட்டும் 44 ரன் எடுத்தார். மற்றவர்கள் வந்த வேகத்தில் வெளியேற இங்கிலாந்து 234 ரன்னில் 2வது இன்னிங்சை முடித்துக் கெண்டது. அதனால் நியூசி 423 ரன் வித்தியாசத்தில் ஆறுதல், அபார வெற்றியை பதிவு செய்தது.
நியூசிலாந்து வீரர்கள் மிட்செல் சான்ட்னர் 4, மேட் ஹென்றி, டிம் சவுத்தீ தலா 2, வில்லியம் பீட்டர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
The post 4வது நாளில் முடிவுக்கு வந்த போட்டி; நியூசி சாதனை வெற்றி: கடைசி டெஸ்ட்டில் வீழ்ந்த இங்கிலாந்து appeared first on Dinakaran.