×

ஓய்வு பெற்றார் சவுத்தீ

இங்கிலாந்துடனான 3வது டெஸ்ட் முடிவுக்கு வந்ததை அடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூசிலாந்து முன்னணி வீரர் டிம் சவுத்தீ ஓய்வு பெற்றார். நியூசிலாந்து அணியில், கடந்த 2008ல் சவுத்தீ அறிமுகம் ஆனார். அந்த அணிக்காக 104 டெஸ்ட், 161 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 125 டி20 போட்டிகளில் அவர் ஆடியுள்ளார்.

ஐபிஎல்லில் 54 போட்டிகளிலும் சவுத்தீ இடம்பெற்றுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து சவுத்தீக்கு பாராட்டு விழா நடத்தி நியூசிலாந்து வீரர்கள் வழியனுப்பி வைத்தனர். சக கிரிக்கெட் வீரர்கள் மட்டும் அல்லாது பல்வேறு துறைகளை சேர்ந்தோர் சவுத்தீக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

The post ஓய்வு பெற்றார் சவுத்தீ appeared first on Dinakaran.

Tags : Southee ,New Zealand ,Tim Southee ,England ,Dinakaran ,
× RELATED பசிபிக் கடலில் வனுவாட்டு தீவு நாடு...