×

பிரதமர் மீது அதிருப்தி; கனடா துணைபிரதமர் திடீர் ராஜினாமா

டொரான்டோ: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முடிவு மீது அதிருப்தி அடைந்த துணை பிரதமரும், பெண் நிதியமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசில் நிதியமைச்சராக இருப்பவர் கிறிஸ்டியா ப்ரீலேண்ட். மேலும் அவர் துணை பிரதமராகவும் உள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் மிகவும் சக்திவாய்ந்த அமைச்சராக இருந்தவர். நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகழ் குறைந்து வருவதால், அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

The post பிரதமர் மீது அதிருப்தி; கனடா துணைபிரதமர் திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Canada ,Deputy Prime Minister ,Toronto ,Justin Trudeau ,Finance Minister ,Chrystia Preeland ,Canadian Prime Minister ,Deputy Prime Minister… ,
× RELATED அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறுமா...