×

ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 4 பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் அணு ஆயுதம் கொண்ட நீண்டதூர பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் தொடர்பாக அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தை மேற்பார்வையிடும் அரசுக்கு சொந்தமான தேசிய மேம்பாட்டு நிறுவனம் உட்பட 4 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை திட்டத்தில் ஈடுபட்டுள்ள என்டிசி மற்றும் மூன்று வர்த்தக நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையானது துரதிஷ்டவசமானது மற்றும் ஒருதலைப்பட்சமானது. தனியார் வர்த்தக நிறுவனங்கள் மீதான தடை வருத்தமளிக்கிறது. கடந்த காலங்களில் இதேபோன்ற பட்டியல்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் வெறும் சந்தேகத்தை அடிப்படையாக கொண்டவையாக இருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 4 பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை appeared first on Dinakaran.

Tags :
× RELATED தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன் உடல் அமெரிக்காவில் அடக்கம்