வாஷிங்டன்: சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் வங்கதேசத்துக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கவாழ் இந்தியர்கள் வலியுறுத்தி உள்ளனர். வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டம் தீவிரம் அடைந்ததால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். அங்கு பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்துக்களும், இந்து கோயில்களும் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிறுபான்மையினருக்கு எதிராக தொடர் தாக்குதல் நடத்தும் வங்கதேசம் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கவாழ் இந்தியர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் தானேதர், “சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தும் வங்கதேசம் மீது தற்போதைய பைடன் நிர்வாகமும், பொறுப்பேற்க உள்ள டிரம்ப் நிர்வாகமும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
The post சிறுபான்மையினருக்கு எதிராக தொடர் தாக்குதல்; வங்கதேசம் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வேண்டும்: இந்திய அமெரிக்கர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.