மும்பை: இந்திய பங்குச்சந்தைகள், தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் சரிவைச் சந்தித்தன. நேற்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 964 புள்ளிகள் சரிந்து 79,218 ஆகவும், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 247 புள்ளிகள் சரிந்து 23,952 ஆகவும் இருந்தது. கடும் சரிவால் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2,83,864 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த வார துவக்கத்தில் இருந்து நேற்று வரை மொத்தம் ரூ.10,30,154 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல், ரூபாய் மதிப்பும் கடும் சரிவை சந்தித்து வருகிறது.
தொடர்ந்து 84 ரூபாய்க்கு மேல் இருந்த டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, நேற்று 85.08 என்ற வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை ரூபாய் மதிப்பு 2.2 சதவீதம் சரிந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று ரூபாய் மதிப்பு சரிவுக்கு, அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி குறைப்பு முடிவே காரணமாகும். பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால் இறக்குமதி செய்வோர் பாதிக்கப்படுவார்கள்.
The post அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: பங்குச்சந்தையில் 3 நாளில் ரூ.10.3 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.