மெக்சிகோ: அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள கடும் எச்சரிக்கையையும் மீறி ஆயிரக்கணக்கான சட்ட விரோத புலம் பெயர்வோர் தெற்கு மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் நுழையும் பயணத்தை தொடங்கியுள்ளனர். வறுமை, பொருளாதார வீழ்ச்சி, உள்நாட்டு குழப்பங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவது தொடர்ந்து வருகிறது. தாம் அதிபராக பதவியேற்ற உடன் அனைத்து சட்டவிரோத புலம்பெயர் மக்களையும், ராணுவத்தின் உதவியோடு நாடு கடத்த போவதாக டொனால்ட் டிரம்ப் அண்மையில் அதிரடியாக அறிவித்தார்.
ஆனால் அவரது எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தெற்கு மெக்சிகோவில் பல்லாயிரம் சட்டவிரோத புலம் பெயர்வோர் கூடினார்கள். வெனிசுலா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவை நோக்கி தங்களது பயணத்தை தொடங்கினார்கள். புலம்பெயர் மக்கள் நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளை தடுத்து குறுக்கு வழியாக அமெரிக்காவும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். அமெரிக்காவில் 1 கோடியே 10 லட்சம் பேர் ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வசித்து வருகிறார்கள்.
மெக்சிகோ எல்லை வழியாக நுழையும் சட்டவிரோத குடியேறிகளை தடுக்க தமது முந்தைய ஆட்சியில் டிரம்பால் முழுமையாக இயலவில்லை. ஆனால் இரண்டாவது முறையாக தாம் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்கள் அனைவரையும் வெளியேற்ற போவதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ள டிரம்ப், தற்போது அதிபர் ஜோ பைடன் அரசு கடைபிடிக்கும் புலம்பெயர் கொள்கையை முடிவுக்கு கொண்டுவர இருப்பதால் புலம்பெயர் மக்கள் அச்சமடைந்த இருக்கிறார்கள்.
The post அமெரிக்காவுக்குள் நுழைய புதிய புலம்பெயர் கூட்டம் பயணம்: தெற்கு மெக்சிகோவில் இருந்து பல்லாயிரம் மக்கள் புறப்பட்டனர் appeared first on Dinakaran.