- பெண்கள் ஆணையம்
- துணை ஜனாதிபதி
- சண்டிகர்
- அரியானா மகளிர் ஆணையம்
- துணைத் தலைவர்
- சோனியா அகர்வால்
- நிலை
- அரியானா
- ரூ
- தின மலர்
சண்டிகர்: ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அரியானா மகளிர் ஆணைய துணைத் தலைவர் சோனியா அகர்வால், அவரது டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அரியானா மாநிலத்தின் மகளிர் ஆணைய துணைத் தலைவராக சோனியா அகர்வால் என்பவர் பணியாற்றி வருகிறார். ெபண் துணை ஆய்வாளர் ஒருவர் மீது மாநில மகளிர் ஆணையத்தில் பதியப்பட்ட குற்றச்சாட்டு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. இந்த புகாரை முடித்து வைப்பதற்காக பெண் துணை ஆய்வாளரிடம் மகளிர் ஆணைய துணை தலைவர் சோனியா அகர்வால் லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிர்ச்சியடைந்த பெண் துணை ஆய்வாளர், லஞ்சம் கோரிய சோனியா அகர்வால் மற்றும் அவரது வாகன ஓட்டுநர் மீது அரியானா மாநில ஊழல் தடுப்பு மையத்திடம் புகார் அளித்தார். அவர்கள் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்திற்கு மகளிர் ஆணைய துணைத் தலைவர் வரவழைக்கப்பட்டார். அப்போது ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி போது, வாகன ஓட்டுனர் கையும் களவுமாக பிடிப்பட்டார். அரியானா ஊழல் தடுப்பு மையத்தின் தொடர் விசாரணைக்கு பின், மகளிர் ஆணைய துணைத் தலைவர் சோனியா அகர்வால் மீதும் வழக்குப்பதியப்பட்டது.
இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘மகளிர் ஆணைய துணைத் தலைவராக சோனியா அகர்வால் தனது வாகன ஓட்டுனர் குல்பீர் மூலம் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்க முயன்ற போது கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக சோனியா அகர்வாலும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.
The post ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய போது மகளிர் ஆணைய துணைத் தலைவி கைது: புரோக்கராக செயல்பட்ட டிரைவருக்கும் காப்பு appeared first on Dinakaran.