சோழவந்தான்: கூலித் தொழிலாளியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (40). கூலி தொழிலாளியான இவர், கடந்த 12ம் தேதி, அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கணேசனை கொலை செய்ததாக, அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி பாண்டியம்மாளை (45) போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கணேசனும், பாண்டியம்மாளும் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். உறவினர்கள் கண்டித்தும் இருவரும் தங்கள் நிலையை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் 12ம் தேதி கணேசன் வீட்டிற்கு பாண்டியம்மாள் வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் கத்தியை எடுத்து கணேசன் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியுள்ளார் என்பது தெரியவந்தது.
The post கூலி தொழிலாளியை கழுத்தறுத்து கொன்ற கள்ளக்காதலி கைது appeared first on Dinakaran.