திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே இளம்பெண் மர்மச்சாவு வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. உல்லாசமாக இருக்க மறுத்த அவரை சரமாரி தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 2 கள்ளக்காதலர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் அருகே உள்ள ஒண்ணுவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி சந்தியா (28). இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. சிவா, பெங்களூருவில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இதனால் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வாராம். இதனால் சந்தியா தனியாக வசித்து வந்தார்.
சந்தியா, அதேபகுதியில் உள்ள மகளிர் குழுவினரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 11ம்தேதி சந்தியாவிடம் கடன் தொகையை வசூலிக்க மகளிர் குழுவினர் வந்துள்ளனர். ஆனால் அவரது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் அரை நிர்வாண நிலையில் ரத்தக்காயங்களுடன் சந்தியா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தியாவின் செல்போனை கைப்பற்றி அவருடன் பேசியவர்கள் விவரங்களை சேகரித்தனர். அதில் 2 எண்களில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அதேபகுதியை சேர்ந்த குமரேசன் (26), விக்னேஷ் (25) ஆகிய 2 பேரின் செல்போனில் இருந்து அழைப்புகள் வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொலையான சந்தியாவுக்கும், குமரேசனுக்கும் கடந்த 7 ஆண்டுகளாக தகாத உறவு இருந்துள்ளது. சந்தியாவின் கணவர் மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவதால் இதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இதனிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குமரேசன் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.
அப்போது விக்னேஷூடன் சந்தியாவுக்கு தகாத உறவு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி ஜாலியாக இருந்து வந்துள்ளனர். மேலும் அடிக்கடி பைக்கில் வெளியே சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு குமரேசன் ஊர் திரும்பினார். அப்போது தனது கள்ளக்காதலிக்கும், விக்னேஷூக்கும் தொடர்பு இருந்த தகவல் தெரிந்தது. இதனால் சந்தியா மீது ஆத்திரமடைந்தார். கடந்த 10ம்தேதி சந்தியாவின் வீட்டுக்கு குமரேசன் சென்றார். அங்கு சந்தியாவை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். ஆனால் சந்தியா மறுத்துள்ளார்.
அப்போது சந்தியாவிடம், `உனக்கும் விக்னேஷூக்கும் தொடர்பு இருப்பது தெரியும். இதனால்தான் என்னை நீ தவிர்க்கிறாய்’ எனக்கூறி வாக்குவாதம் செய்தார். பின்னர் சந்தியாவை அவர் சரமாரி தாக்கினார். இதில் மயங்கி விழுந்த சந்தியாவுடன் வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் சென்ற சிறிது நேரம் கழித்து நள்ளிரவு விக்னேஷ் வந்துள்ளார். அவரும் சந்தியாவுடன் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஆனால் தனக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி சந்தியா மறுத்தார். இதனை ஏற்க மறுத்த விக்னேசும் சந்தியாவை சரமாரி தாக்கிவிட்டு உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மூச்சுத்திணறி சந்தியா இறந்துள்ளார். இதையடுத்து குமரேசன், விக்னேஷ் ஆகிய இருவரும் எதுவும் நடக்காதது போல் தலைமறைவாகிவிட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து குமரேசன், விக்னேஷ் ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இன்று காலை கைது செய்தனர். பின்னர் இருவரையும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற 2 கள்ளக்காதலர்கள்: உல்லாசத்துக்கு மறுத்ததால் வெறிச்செயல் appeared first on Dinakaran.