×

மனைவி, மாமியாரின் துன்புறுத்தலுக்கு ஆளான போலீஸ் ஏட்டு ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை: கர்நாடாவில் அடுத்த அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடாவில் அடுத்த அதிர்ச்சியாக மனைவி, மாமியாரின் துன்புறுத்தலுக்கு ஆளான போலீஸ் ஏட்டு ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பையப்பநஹள்ளி வழியாக சென்ற ரயிலில் இருந்து நேற்று முன்தினம் இரவு போலீஸ் ஏட்டு திப்பண்ணா (33) என்பவர், ஓடும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஹுலிமாவு காவல் நிலையத்தில் பணியில் இருந்த திப்பண்ணா, தனது ஷிப்ட் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடந்த சண்டையால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவ்விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட ஏட்டு திப்பண்ணாவிடம் இருந்து, கன்னடத்தில் எழுதப்பட்ட ஒரு பக்க தற்கொலைக் குறிப்பு கடிதத்தை கைப்பற்றினோம். அதில் அவர் ‘எனது மனைவி மற்றும் மாமியார் என்னை சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் செய்தனர். கடந்த 2021ல் திருமணம் செய்து கொண்ட திப்பண்ணாவுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. சம்பவம் நடந்த நாளில், அவர் காலை எட்டு மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை வேலை செய்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது தனது மனைவியுடன் வாக்குவாதத்திற்குப் பிறகு, தனது வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொண்டார். திப்பண்ணாவின் மனைவி மற்றும் மாமியார் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறினார். சமீபத்தில் பெங்களூருவில் பொறியாளர் ஒருவர், மனைவியின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது மனைவியால் துன்புறுத்தலுக்கு ஆளான போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post மனைவி, மாமியாரின் துன்புறுத்தலுக்கு ஆளான போலீஸ் ஏட்டு ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை: கர்நாடாவில் அடுத்த அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bangalore ,Payapnahalli ,Bangalore, Karnataka ,
× RELATED ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர்...