நொய்டா: அரியானாவில் ‘டேட்டிங்’ ஆப்ஸ் மூலம் காதலியை விபசார தொழிலுக்கு தள்ளிய காதலன் உட்பட 2 இளைஞர்கள், 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகர பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன் மூன்று இளைஞர்களையும் 2 இளம் பெண்களையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைதான லாலு யாதவ் என்பவர் தனது காதலி அஞ்சலியின் உதவியுடன் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர், இளம் பெண்களை குறிவைத்து வைத்து பேசி பழகி வந்தனர். லாலு யாதவ் தனது காதலியுடன் பல இடங்களில் சுற்றித் திரிவார். பணம் சம்பாதிப்பதற்காக விபசாரத்தை செய்து வந்தனர்.
தனது காதலியையும் விபசாரத்தில் லாலு யாதவ் ஈடுபடுத்தினர். காதலி அஞ்சலி ‘டேட்டிங்’ என்ற ஆப்ஸ் மூலம் வாடிக்கையாளர்களை அடையாளம் காணுவார். நொய்டாவில் வசிக்கும் இளைஞன் ஒருவர், டேட்டிங் ஆப்ஸ் மூலம் பெண் ஒருவரை அழைத்தார். அந்தப் பெண்ணும் டேட்டிங்குக் சம்மதம் தெரிவித்துவிடுகிறது. இருவரும் காரில் ஜாலியாக சுற்றிவந்தனர். அப்போது இளைஞனுடன் ஜாலியாக இருந்த பெண் கொடுத்த தகவலின் பேரில், லாலு யாதவ் உள்ளிட்ட சிலர் காரை சுற்றிவளைத்தனர்.
அவர்கள் அந்த இளைஞனிடம் பிளாக்மெயில் செய்யத் தொடங்குகினர். பின்னர் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்புவோம் என்றும் அந்த இளைஞனிடம் மிரட்டினர். ஆனால் அந்த இளைஞர் காவல் துறையிடம் தனக்கு நேர்ந்த மிரட்டல் குறித்து புகார் அளித்தார். அதையடுத்து தனது காதலியை வைத்து விபசார தொழிலில் ஈடுபட்டு வந்த லாலு யாதவ், அவருக்கு உதவிய மேலும் மூன்று இளைஞர்கள், 2 இளம்பெண்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். லாலு யாவத் பிடியில் 12க்கும் மேற்பட்டோர் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக தொடர் விசாரணையை நடத்தி வருகிறோம். இவர்களுக்கு வேறு ஏதேனும் கும்பலுடன் தொடர்புண்டா என்பதையும் விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
The post ‘டேட்டிங்’ ஆப்ஸ் மூலம் காதலியை விபசார தொழிலுக்கு தள்ளிய காதலன்: 3 இளைஞர்கள், 2 இளம்பெண்கள் கைது appeared first on Dinakaran.