கோவை: திருமண ஆசை காட்டி ஐடி பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை கேகே புதூரை சேர்ந்தவர் 29 வயது பெண். ஐடி ஊழியர். இவர் கடந்த 2008ம் ஆண்டு தடாகம் ரோட்டில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தார். அப்போது அவருக்கு தன்னுடன் படித்த இடையர்பாளையத்தை சேர்ந்த ஜெய்லாபுதீன் என்பவருடன் காதல் ஏற்பட்டது. அதன்பின்னர் இருவரும் கல்லூரி படிப்பு, வேலை என சென்றதால் தொடர்பு இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த பெண்ணுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதற்கிடையே கடந்த 2022ம் ஆண்டு அந்த பெண்ணுக்கு ஜெய்லாபுதீனை மீண்டும் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. தனைத்தொடர்ந்து பள்ளி பருவ காதலை இருவரும் மீண்டும் தொடர்ந்தனர். அப்போது ஜெய்லாபுதீன் திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணுடன் ஜாலியாக சுற்றினார். பாண்டிச்சேரி, கொச்சின் என சென்று உல்லாசமாக இருந்தனர். அதன்பின்பு ஜெய்லாபுதீன் அந்த பெண்ணுடன் பழகுவதை தவிர்த்ததாக தெரிகிறது.
இது குறித்து கேட்டபோது, ஜெய்லாபுதீன் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்து மிரட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜெய்லாபுதீன்(30) மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post திருமண ஆசை காட்டி ஐடி பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் appeared first on Dinakaran.