×

திமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்

திருவள்ளூர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் வி.தியாகராஜன் ஏற்பாட்டில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புல்லரம்பாக்கத்தில் நடந்தது. இதில், ஒன்றியச் செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் உமா மகேஸ்வரன், நிர்வாகிகள் தென்னவன், கபிலன், தமிழ்வாணன், சந்தோஷ், விக்டர் மோகன், சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ஆவடி சா.மு நாசர் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு, பேச்சாளர்கள் சைதை சாதிக், பார்கவி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் காயத்ரி ஸ்ரீதரன், நரேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், விமல்வர்ஷன், ஒன்றிய செயலாளர் கமலேஷ், நகர செயலாளர் திருமலை, நிர்வாகிகள் இளவழகன், சதீஷ்குமார், அப்பன்ராஜ், மதியழகன், நடராஜன், டில்லிபாபு, சரத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புருஷோத்தமன் நன்றி கூறினார்.

The post திமுக மாணவரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Minister ,Nassar ,THIRUVALLUR ,AVADI ,SA ,PRINCIPAL ASSISTANT SECRETARY ,STALIN ,Deputy Principal Assistant Professor ,Thiruvallur Central District ,Dinakaran ,
× RELATED இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக மீண்டும்...