×

திருவள்ளூர் மாவட்டத்தில் 1,370.50 மி.மீ. மழை பெய்துள்ளது : சராசரியாக 91.37 மி.மீ.

திருவள்ளூர், டிச. 13: திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1370.50 மி.மீ. மழையும் மற்றும் சராசரியாக 91.37 மி.மீ. மழையும் பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து நேற்று முழுவதும் பரவலாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பெய்த மழை விவரம் வருமாறு: பொன்னேரி: 30 மி.மீ., ஊத்துக்கோட்டை: 75 மி.மீ, பள்ளிப்பட்டு: 76 மி.மீ., கும்மிடிப்பூண்டி: 87 மி.மீ., திருத்தணி: 145 மி.மீ., திருவள்ளூர்: 102.5 மி.மீ., பூந்தமல்லி: 110.5 மி.மீ., பூண்டி: 85 மி.மீ., சோழவரம்: 35.3 மி.மீ., தாமரைப்பாக்கம்: 56 மி.மீ., ஆர்கே பேட்டை: 77 மி.மீ., திருவாலங்காடு: 120 மி.மீ., செங்குன்றம்: 69.2 மி.மீ., ஜமீன் கொரட்டூர்: 115 மி.மீ., ஆவடி: 187 மி.மீ.மழையும் என மொத்தம் 1370.50 மி.மீ.மழையும், சராசரியாக 91.37 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் 1,370.50 மி.மீ. மழை பெய்துள்ளது : சராசரியாக 91.37 மி.மீ. appeared first on Dinakaran.

Tags : Tiruvallur district ,Thiruvallur ,Chennai Meteorological Center ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் 214 ஏரிகள் நிரம்பியது