சென்னை: டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி எதுவும் செய்யப் போவதில்லை என ஒன்றிய அமைச்சர் கூறினார். டெல்லியில் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்த பின் விசிக தலைவர் திருமாவளவன் தகவல் தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை கைவிடக் கோரி ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் மனு அளித்தேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் தனது பார்வைக்கு வந்ததாக கிஷன் ரெட்டி கூறினார். தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருப்போம்; கவலை வேண்டாம் என்று கிஷன் ரெட்டி கூறினார்.
The post டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி எதுவும் செய்யப் போவதில்லை: ஒன்றிய அமைச்சர்! appeared first on Dinakaran.