- சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம்
- திருவண்ணாமலை ஐயங்குளம்
- திருவண்ணாமலை
- தெப்பல் உட்சம்
- கார்த்திகை தீபத்தி
- திருவிழா
- சுப்ரமணியர்
- பவானி
- ஐயன்குளம்
- அண்ணாமலை கோவில்
- ஐயன்குளம்…
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா தொடர்ந்து நடைபெறும் தெப்பல் உற்சவத்தின் நிறைவாக இன்றிரவு ஐயங்குளத்தில் சுப்பிரமணியர் பவனி நடைபெற உள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடந்தது.
தொடர்ந்து ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்றிரவு சந்திரசேகரர் தெப்பலில் பவனி வந்தார். 2வது நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பராசக்தி அம்மன் ஐயங்குளத்தில் பவனி வந்து பத்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். ஐயங்குளம் முழு கொள்ளளவு நிரம்பியிருப்பதால், வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு கருதி, குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்கவில்லை.
தெப்பல் உற்சவத்தின் 3வது நாளாக இன்று இரவு சுப்பிரமணியர் உற்சவம் நடைபெற உள்ளது. தீபத்திருவிழாவின் நிறைவாக ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் நாளை மாடவீதியில் வலம் வர உள்ளார். இந்நிலையில், மலைமீது ஏற்றப்பட்ட மகாதீபம், தொடர்ந்து 3வது நாளாக நேற்று காட்சியளித்தது. அதையொட்டி, நேற்று மாலை 6 மணியளவில் மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. மலையில் தீபம் காட்சிளிப்பதை தரிசிக்க, அண்ணாமலையார் கோயிலில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. அண்ணாமலை மீது மகாதீபம் தொடர்ந்து வரும் 23ம் தேதி வரை காட்சியளிக்கும். எனவே, மலை மீது தீபம் காட்சி தரும் நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post திருவண்ணாமலை ஐயங்குளத்தில் இன்றிரவு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் appeared first on Dinakaran.