×

திருமூர்த்தி அணையில் இருந்து ஜன.10-ம் தேதி வரை கூடுதலாக தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு

சென்னை திருமூர்த்தி அணையில் இருந்து ஜன.10-ம் தேதி வரை கூடுதலாக ஒரு சுற்றுக்கு 2,000 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு நான்கு (4) சுற்றுகள் 18.08.2024 முதல் 16.12.2024 வரை 120 நாட்களுக்குள் உரிய இடைவெளிவிட்டு 8000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட), தண்ணீர் திறந்து விட ஏற்கெனவே ஆணையிடப்பட்டதை தொடர்ந்து, மேலும் 17.12.2024 முதல் 10.01.2025 வரை கூடுதலாக ஒரு சுற்றுக்கு 2000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட), தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்தில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும், திருப்பூர் மாவட்டத்தில், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும் என மொத்தம் 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருமூர்த்தி அணையில் இருந்து ஜன.10-ம் தேதி வரை கூடுதலாக தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Water Department ,Thirumurthi Dam ,Chennai ,Tiruppur District ,Parambikulam Deepwater Project ,Thirumurthi ,
× RELATED சென்னை முகத்துவாரங்களை தூர்வாரும்...