×

ராஜபாளையம் அருகே மருத்துவ துணி குடோனில் திடீர் தீ: கைவினைப் பொருட்கள், கழிவுகள் எரிந்து சேதம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மருத்துவ துணிகள் இருப்பு வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா. இவரது மனைவி முத்துலட்சுமி. முதிய தம்பதியான இவர்கள் கைவினைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக வீட்டின் அருகிலேயே சிறிய குடோன் வைத்துள்ளனர்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால், தயாரித்து வைத்த கைவினைப் பொருட்களை குடோனில் வைத்திருந்தனர். மேலும் சொந்த பயன்பாட்டுக்காக மருத்துவக் கழிவு பேண்டேஜ் துணி, பஞ்சுகளையும் சேகரித்து வைத்திருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென குடோனில் தீப்பிடித்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக உரிமையாளருக்கும் ராஜபாளையம் தீயணைப்புத்துறை, போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் ராஜபாளையம் நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்குள் தீ மளமளவென எரியத் தொடங்கி இருந்தது. துரிதமாக செயல்பட்ட வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீ அதிகமாக பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் பல கைவினைப் பொருட்கள், பேண்டேஜ் துணிகள் எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரின் பேரில் மின் கசிவு மூலம் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதனால் ஏற்பட்டதா என ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராஜபாளையம் அருகே மருத்துவ துணி குடோனில் திடீர் தீ: கைவினைப் பொருட்கள், கழிவுகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Medical ,Cloth ,Kudon ,Rajapaliam ,Rajapalayam ,Pichaiya ,Velayudapuram ,Rajapaliam-Chathrapati Road, Virudhunagar District ,Muthulakshmi ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல்...