- கொடைக்கானல்
- கீழ் வயல்
- மல்மலை
- கோதைக்கானல்
- திண்டுக்கல் மாவட்டம்
- கோடைகானில்
- மன்னவனூர் உராட்சி
- கலன்வயல்
- கலகர்
- தின மலர்
கொடைக்கானல்: கொடைக்கானலில் மேல்மலை பகுதியில் உள்ள கீழான வயல் கிராமத்தில் குளத்தின் கரை உடைந்து வெள்ளத்தால் மலைச்சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மேல்மலைப் பகுதியில், மன்னவனூர் ஊராட்சியில் கீழானவயல் மலைக்கிராமம் உள்ளது.
இந்த ஊர் அருகே புலி பிடித்த ஓடைக்குளம் உள்ளது. இதில் தேங்கும் மழைநீர் கிராமத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக கொடைக்கானல் பகுதியில் பெய்த மழையால், புலி பிடித்த ஓடைக்குளம் நிரம்பி, அதன் கரை உடைந்தது.
இதனால், குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக பாய்ந்து, கிராமத்திற்கு செல்லும் மலைச்சாலை சேதமடைந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால், கீழான வயல் கிராம மக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். எனவே, குளக்கரையை சீரமைத்து, சாலையை சரி எய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கொடைக்கானலில் வெள்ளத்தால் குளக்கரை உடைந்து மலைச்சாலை துண்டிப்பு: போக்குவரத்துக்கு கிராம மக்கள் அவதி appeared first on Dinakaran.