×

ஆத்தூரில் பரிதாபம் பைக் மீது அரசு பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலி

 

ஆறுமுகநேரி, டிச. 9: ஆத்தூரில் பைக் மீது அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்த கட்டிடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.ஆறுமுகநேரி அருகேயுள்ள ஆத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்த சுடலையின் மகன் மாரியப்பன் (50) கட்டிட தொழிலாளியான இவர் நேற்று (8ம் தேதி) காலை ஆத்தூரில் இருந்து டிசிடபிள்யூ சாலை வழியாக நல்லூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அதேவேளையில் நெல்லையில் இருந்து காயல்பட்டினம் நோக்கி சென்ற அரசு பஸ், இவரது பைக் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி படுகாயமடைந்த மாரியப்பன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த ஆறுமுகநேரி போலீசார், மாரியப்பனின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர், எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மாரியப்பனுக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

The post ஆத்தூரில் பரிதாபம் பைக் மீது அரசு பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Athur ,Arumuganeri ,Atur ,Mariyappan ,Sudala ,Aathur Upper ,Arumugneri ,
× RELATED கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் ஆத்தூர்,...