×

மணப்பாறை அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட 4 மாடுகள்

திருச்சி, டிச.16:மணப்பாறை அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட 4 மாடுகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் பல்வேறு இடங்களிலும் ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. இந்நிலையில் மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி ஆற்றுப்பாலம் அருகே டொம்பச்சி ஆற்றின் நடுவே சீமைக்கருவேல முட்புதரில் சிக்கிய நிலையில் 4 எருமை கன்றுகள் இறந்த நிலையில் கிடந்தது. ஆற்றில் நீர் குறைய தொடங்கி உள்ளதால் மாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் தேங்கி நின்றது. இதுபற்றி தகவல் அறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீயணைப்பு துறை மற்றும் கால்நடை துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி இறந்து போன மாடுகளை கடும் போராட்டத்திற்கு மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின் மாடுகள் புதைக்கப்பட்டது. ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பது தெரியவந்த நிலையில், மாடுகள் எங்கிருந்து ஆற்றில் அடித்து வரப்பட்டன என்றும் மாட்டின் உரிமையாளர்கள் யார் என்ற விபரம் தெரியவில்லை. இறந்த மாடுகளின் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

The post மணப்பாறை அருகே ஆற்றில் அடித்து வரப்பட்ட 4 மாடுகள் appeared first on Dinakaran.

Tags : Manapara ,Trichy ,Trichy district ,Dinakaran ,
× RELATED திருச்சியில் மண் சரிவில் சிக்கிய தொழிலாளி பத்திரமாக மீட்பு..!!