×

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடைஞாயிறு விழா

பள்ளிகொண்டா, டிச.16: விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடைஞாயிறு விழாவையொட்டி, பிள்ளைபேறு பெற்ற பெண்கள் பலா மரத்தில் தொட்டில் கட்டி நேர்த்திகடன் செலுத்தினர். பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு விழாவையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை, கலவை சச்சிதானந்த சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து சிம்ம குளத்தினை திறந்து வைத்தனர். முன்னதாக பாலாற்றில் நீராடி சூரிய பிரம்ம தீர்த்த குளத்தில் மூழ்கி எழுந்த வந்த பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடியில் பூ, பழங்களை கட்டி கொண்டு சிம்ம குள நுழைவு வாயிலில் நுழைந்து தீர்த்தத்தில் புனித நீராடினர். தொடர்ந்து, ஈர துணியுடன் கோயில் பிரகாரங்களில் படுத்துறங்கி சிவனை வழிபட்டனர். பின்னர் 1 மணி நேரத்திற்கு மேல் படுத்துறங்கிய பெண்கள் மூலவர் மார்க்கபந்தீஸ்வரரை தரிசனம் செய்தனர். குழந்தை வரம் வேண்டி நள்ளிரவில் கடும் குளிரினையும் பொருட்படுத்தாமல் சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் விடிய விடிய சுழற்சி முறையில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர்.

The post விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கடைஞாயிறு விழா appeared first on Dinakaran.

Tags : Vrinchipuram Markbanthishwarar Temple ,Skoligonda ,Vrinjipuram Markbandiswarar Temple ,Vrinchipuram Markabantieswarar Temple ,Skoligonda Ratnagiri ,Katainnaiyu Festival ,Vrinchipuram Markbandiswarar Temple ,
× RELATED கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு சென்ற...