- அம்பேத்கர் நினைவு நாள்
- விருதுநகர்
- டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம்
- விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு
- எல்லாளன்
- மீனாம்பிகை
- தின மலர்
விருதுநகர், டிச.7: அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் பேரணி நடைபெற்றது. விருதுநகரில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சி பேரணி நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் எள்ளாளன் தலைமையில் மீனாம்பிகை பேருந்து நிறுத்தத்தில் துவங்கி பழைய பஸ் நிலையம் வழியாக சென்று தேசபந்து மைதானம் அடைந்தது.
அங்கு வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரணியில் விசிக மாவட்ட செயலாளர்கள் சீனு சதுரகிரி, இனியவன், சந்திரன், திமுக நகர செயலாளர் தனபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், ஆதித்தமிழர் கட்சி கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர். பேரணி ஒருங்கிணைப்பை விசிக நிர்வாகி ஆறுமுக சக்திவேல் செய்திருந்தனர்.
The post அம்பேத்கர் நினைவுதினம் அனைத்துக்கட்சி சார்பில் பேரணி appeared first on Dinakaran.