×

பிஎஸ்என்எல் சங்க மாநாட்டிற்கு திருப்பூரில் இருந்து தேசியக்கொடி

திருப்பூர், டிச.19: தமிழ்நாடு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றோர் சங்க மாநாடு இன்றும், நாளையும் திருச்சியில் நடைபெறுகிறது. மாநாடு தொடக்க விழாவையொட்டி இன்று தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் உள்ள கொடிகாத்த குமரன் நினைவத்திலிருந்து திருச்சி மாநாட்டுக்கு தேசியக்கொடி எடுத்து வர மாநில தலைமை அறிவுறுத்தி இருந்தது.

அதன் அடிப்படையில் நேற்று திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்து தேசியக்கொடி பயணத்தை மாவட்ட தலைவர் சவுந்தரபாண்டியன் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட சிஐடியு தொழிற்சங்க தலைவர் உன்னிகிருஷ்ணன், கோவை மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தின் செயலாளர் குடியரசுவிடம் வழங்கினர். இந்நிகழ்வில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post பிஎஸ்என்எல் சங்க மாநாட்டிற்கு திருப்பூரில் இருந்து தேசியக்கொடி appeared first on Dinakaran.

Tags : Tirupur for BSNL Association conference ,Tirupur ,Tamil Nadu BSNL Retired Parents Association conference ,Trichy ,Kodikatha Kumaran memorial ,Trichy… ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே...