கூடலூர், டிச.19: கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலவாடி பகுதியில் வசித்தவர் சண்முகலிங்கம் (50). கூலி தொழிலாளியான இவர் நேற்று அங்குள்ள வனப்பகுதியில் இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நியூ ஹோப் காவல் நிலைய எஸ்ஐ கணேசன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இவர் இறந்து மூன்று நாட்களுக்கும் மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் சம்பவ இடத்தில் கூடலூர் டிஎஸ்பி வசந்தகுமார், ஆர்டிஓ செந்தில்குமார் ஆகியோரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையின் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டு தேடுதலும் நடத்தப்பட்டது. இதனை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post வனப்பகுதியில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.