- கிளுவன்கட்டூர் கிளை
- உடுமலை
- உடுமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க
- தங்கராஜ் (ஏ) மீக்னநாமூர்த்தி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- உடுமலை திருமூர்த்தி அணை
- கிளுவன்கட்டூர் கிளை கால்வாய்
உடுமலை, டிச. 19: உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தங்கராஜ் (எ) மெய்ஞானமூர்த்தி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசன திட்டத்தின்கீழ், உடுமலை பிரதான கால்வாயில் 3.67 கிளுவன்காட்டூர் கிளை வாய்க்கால் சுமார் 10 கிமீ தூரம் உள்ளது. உடுமலை ஒன்றியத்தில் உள்ள 8 ஊராட்சிகளை கடந்து இந்த கால்வாய் செல்கிறது.
நிறைய பாசன வசதிகள் பெற்றுள்ள இந்த கிளை வாய்க்கால் முற்றிலும் சிதிலமடைந்து, தண்ணீர் எடுக்க இயலாதவாறு உள்ளது. இதுபற்றி கடந்த 2 ஆண்டுகளாக தமிழக நீர்வளத்துறையில் பலமுறை மனு அளித்தும் நிதி ஆதாரம் இல்லை என கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர். தை மாதம் பாசனத்துக்கான நீரை எடுத்துச் செல்ல ஏதுவான பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The post கிளுவன்காட்டூர் கிளை வாய்க்காலை தூர் வார கோரிக்கை appeared first on Dinakaran.