×

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் லஞ்சம் தர மறுப்பவர்களின் பட்டாக்களில் குளறுபடி செய்யும் வருவாய் துறை அதிகாரிகள்: பொது மக்கள் குற்றசாட்டு


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் லஞ்சம் தர மறுப்பவர்களின் வீட்டு மனைப்பட்டாக்களில், விஏஓ உள்ளிட்ட வருவாய் துறையினர் குளறுபடி செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் தாலுகாவில் 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் அடங்கி உள்ளன. தற்போது ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் இருங்காட்டுக்கோட்டை, வல்லம், வடகால், மாம்பாக்கம், பிள்ளைபாக்கம், வெங்காடு செங்காடு, சுங்குவார்சத்திரம் ஆகிய பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காகள் உள்ளன. மேலும், ஆயிரகணக்கான தொழிற்சாலைகள் தொடங்கபட்டுள்ளன. மேலும், சிப்காட் தொழிற்பூங்காவையொட்டியுள்ள வளர்புரம், மண்ணூர், தண்டலம், மேவளூர்குப்பம், செட்டிப்பேடு, கொளத்தூர், போந்தூர், பண்ருட்டி, மேட்டுப்பாளையம், எச்சூர், குண்ணம் ஆகிய அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொழிற்சாலை நிர்வாகம் சாலையில் தன்னிச்சையாக நிலங்களை வாங்கி தொழிற்சாலைகள் தொடங்கி உள்ளனர்.

இதனால், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் நிலத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ளதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தின் மதிப்பு 5 மாதம் 10 மடங்கு அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியிலிருந்து தொழிலதிபர்கள் மற்றும் ரியல் எஸ்டாடேட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் வீட்டு மனைகள் முதல் ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி வருகின்றனர். தற்போது, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலக எல்லையில் அடங்கிய கிராமங்களில் நிலத்தினை பத்திரபதிவு செய்யப்பட்டு அதற்குண்டான கிராம நிர்வாக அலுவலருக்கு பட்ட பெயர் மாற்றம் செய்யவும், பட்டா உட்பிரிவிற்கு சம்பந்தபட்ட சர்வேயர்கு அனுப்பி வைக்கபடுகிறது.

ஆன்லைன் மூலம் பத்திரத்தினை சம்பந்த அதிகாரிகளுக்கு பார்வையிட்டு அதற்கு 15 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும். தற்போது பட்டா பெயர் மாற்றத்திற்கு ஒருசில கிராம நிர்வாக அலுவலர்களை தவிர பெரும்பாலான அலுவலர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ5 ஆயிரம் பட்டா உட்பிரிவு செய்ய ரூ10 ஆயிரம் முதல் நிலத்திற்கு ஏற்றார்போல் கையூட்டு பெறப்படுகிறது. மேலும், பணம் தர மறுப்பவர்களில் பட்டாக்களில் தவறான பெயர்களை பதிவேற்றம் செய்து, அதற்கு பின்னர் அதனை சரி செய்ய பெரிய தொகையினை கேட்டு மிரட்டி வருகின்றனர். இதேபோல், வல்லம் பகுதி சேர்ந்த எஸ்.ஏ.கே என்ற நிறுவனம் கொளத்தூர் கிராமத்தில் 77 சென்ட் நிலத்தினை வாங்கி உள்ளது. பத்திரபதிவு முடிந்து பட்டா பெயர் மாற்றத்திற்கு ஆன்லைன் மூலம் கொளத்தூர் விஏஓ லாகினுக்கு சென்றுள்ளது.

இதனை கண்ட விஏஓ சம்பந்த நிர்வாகத்திற்கு போன் செய்து ஒரிஜினல் பத்திரத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். நிறுவனம் சார்பில் அலுவலர் ஒருவர் ஒரிஜினல் பாத்திரத்தை கொண்டு சென்று விஏஓவிடம் காண்பித்துள்ளனர். பின்னர், புரோக்கர் மூலம் சம்பந்த நிர்வாகத்திடன் பட்டா ஒன்றிற்கு ரூ5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதற்கு பணம் தர நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரம்டைந்த விஏஓ, எஸ்.ஏ.கே. என்று பட்டா வழங்குவதற்கு பதிலாக எஸ்.கே. என்று பட்டா குளறுபடி செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் விஏஓவிடம் கேட்டதற்கு, இது நாங்கள் எதுவும் செய்யவில்லை, கம்யூட்டர் பிழை நடந்துள்ளது. இதனை சரி செய்ய மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பி வைக்கபடும் என்று அலட்சியமாக கூறியுள்ளார். இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பெரும்பாலான விஏஓக்கள் பணம் தர மறுப்பவர்களின் பட்டாக்களில் குளறுபடி செய்து, மக்களை அலைகழித்து வருகின்றனர். எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும், விஏஓ, சர்வேயர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் லஞ்சம் தர மறுப்பவர்களின் பட்டாக்களில் குளறுபடி செய்யும் வருவாய் துறை அதிகாரிகள்: பொது மக்கள் குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : Revenue ,Sriperumbudur taluk ,Sriperumbudur ,VAO ,Union ,Taluka ,Revenue department ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு...