×

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு வைர கிரீடம் வழங்கிய இஸ்லாமிய பரதநாட்டிய கலைஞர்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்னையை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் ஜாகீர்உசேன் நேற்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அங்கு ரங்கநாதருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடத்தை கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் ஆகியோரிடம் வழங்கினார். பின்னர் ஜாகீர்உசேன் கூறுகையில், அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடம் 3,160 கேரட் மாணிக்க கல், 600 வைர கற்கள் மற்றும் மரகத கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒற்றை மாணிக்க கல் கொண்டு வரப்பட்டு அதிலிருந்து குடைந்து எடுக்கப்பட்டு, 400 கிராம் தங்கத்தில் வைரம் மற்றும் மரகத கற்கள் பதிக்கப்பட்டு ரம்மியமாக உள்ளது. இதனை வடிவமைப்பதற்கு ஏறத்தாழ 8ஆண்டுகள் ஆனது. உலகில் முதல்முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைர கிரீடம் என்பது இதன் தனி சிறப்பு ஆகும்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு வைர கிரீடம் வழங்கிய இஸ்லாமிய பரதநாட்டிய கலைஞர் appeared first on Dinakaran.

Tags : Srirangam ,Chennai ,Jagirusen ,Sami ,Srirangam Ranganathar Temple ,Ranganathar ,Mariyappan ,Arshagar Sundharpater ,
× RELATED திருச்சியில் மண் சரிவில் புதைந்த தொழிலாளரை மீட்கும் பணி தீவிரம்