×

நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம்,டிச.11: கிராமப் பணிகள் தவிர மாற்றுப் பணி உத்தரவுகளை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராமப் பணியாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் கரும்பாயிரம் தலைமை வகித்தார். போராட்ட குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஆலோசகர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

பணியாளர்களின் விரோத போக்கை கடைபிடித்து பாரபட்சமான நிர்வாகத்தை நடத்தும் தலைமையிடத்து துணை தாசில்தார் மற்றும் தாசில்தார் ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும். கிராமப் பணி தவிர மாற்றுப்பணி உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். பாரபட்சமாக வழங்கப்படும் மாற்றுப்பணியை செய்யவில்லை என்றால் எடுக்கப்படும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். சமகல்வி உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

The post நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Revenue Department ,Nagapattinam ,Tamil Nadu Revenue Department Village Staff Association ,Karumbayiram ,Tamil Nadu Revenue Department Village Workers Demonstration ,
× RELATED அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்