×
Saravana Stores

அதானி, மணிப்பூர் விவகாரம் 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே அதானி மீதான லஞ்ச வழக்கு, மணிப்பூர் இனக்கலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அதற்கு அரசு மறுப்பதால் மக்களவை, மாநிலங்களவையில் கடந்த 3 நாட்களாக எந்த அலுவலும் நடைபெறவில்லை. இந்நிலையில் நேற்று நாடாளுமன்றம் கூடியதும் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதை அடுத்து அவையை முதலில் நண்பகல் 12 மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அப்போது, ஒத்திவைப்பு தீர்மானத்தை அவையின் நடவடிக்கைகளை தடுக்கும் ஆயுதங்காள எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதாக ஜெகதீப் தன்கர் குற்றம்சாட்டினார். பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

The post அதானி, மணிப்பூர் விவகாரம் 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது appeared first on Dinakaran.

Tags : Manipur ,Parliament ,New Delhi ,Adani ,Lok Sabha ,
× RELATED நாள் முழுவதும் ஒத்திவைப்பு: அதானி விவகாரத்தால் நாடாளுமன்றம் முடக்கம்