ஹசன்: கர்நாடகாவில் காரின் டயர் வெடித்த விபத்தில் புதியதாக பொறுப்பேற்க சென்ற ஐபிஎஸ் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநில கேடரின் ஐபிஎஸ் அதிகாரியான ஹர்ஷ் பர்தா (27), மைசூருவிலிருந்து ஹாசனுக்கு உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) பொறுப்பேற்க காரில் சென்றார். ஹாசனில் இருந்து சுமார் 10 கி. மீ. தொலைவில், ஹர்ஷ் பர்தா பயணித்த காரின் டயர் திடீரென வெடித்தது. விபத்தில் சிக்கிய கார் சாலையோர மரத்தில் மோதி அருகிலுள்ள வீட்டில் மோதியது.
அங்கிருந்தவர்கள் ஹர்ஷ் பர்தாவை உடனடியாக மீட்டு ஹாசானில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் ஹர்ஷ் பர்தா உயிர் இழந்தார். கார் ஓட்டுநருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் தோசர் கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷ் பர்தா, சமீபத்தில் கர்நாடக போலீஸ் அகாடமியில் தனது நான்கு வார பயிற்சியை முடித்தார். அவரது குடும்பம் பீகாரைச் சேர்ந்தது. அவரது தந்தை நீதிபதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கார் டயர் வெடித்து சிதறியது புதியதாக பொறுப்பேற்க சென்ற ஐபிஎஸ் அதிகாரி விபத்தில் பலி: கர்நாடகாவில் சோகம் appeared first on Dinakaran.