- EVKS
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- மூத்த
- காங்கிரஸ்
- ஈரோட் கிழக்கு
- சட்டமன்ற உறுப்பினர்
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு காங்கிரஸ்
- எலங்கோவன்
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (76) உடல்நிலை பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வருபவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவருக்கு கடந்த அக்டோபர் 31ம் தேதியில் இருந்தே காய்ச்சல் பாதிப்பு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை பெற்று வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் கடும் சளியால் மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் மியாட் மருத்துவமனைக்குச் சென்று இளங்கோவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர், அவருக்கு உரிய உயர் சிகிச்சை அளிக்கும்படி முதல்வர் கேட்டுக் கொண்டார். அதேபோல, தமிழக அதிகாரிகள், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
The post திடீர் உடல்நலக் குறைவு; ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார் appeared first on Dinakaran.