×

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.! வெளியான அறிவிப்பு

சென்னை: நேற்று முன்தினம் காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய பெஞ்சல் புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவியது. இது, இன்று காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட 15 மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

* விழுப்புரம்

* கடலூர்

* புதுச்சேரி

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* சேலம்

* திருவண்ணாமலை

* ஊத்தங்கரை தாலுகா (கிருஷ்ணகிரி மாவட்டம்) , போச்சம்பள்ளி தாலுகா

* நீலகிரி

* ராணிப்பேட்டை

The post கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.! வெளியான அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Storm ,North East ,Puduwa ,Northumping, North ,Dinakaran ,
× RELATED இன்றும் தியேட்டர்கள் மூடலா?