- சிங்கப்பெருமாளிகோயில்
- பேளூர்
- செங்கல்பட்டு
- சிங்கப்பெருமாள் கோயில்
- பெஞ்சல் புயல்...
- சிங்கப்பெருமாள் கோயில் —
- பலூர் பாலம்
- தின மலர்
செங்கல்பட்டு: தொடர் கன மழை எதிரொலி காரணமாக சிங்கபெருமாள்கோவில் – பாலூர் இடையே தரைபாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெஞ்சல் புயலை முன்னிட்டு தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு அருகே ரெட்டிபாளையம் தரைபாலம் தண்ணீரில் மூழ்கியது சிங்கபெருமாள்கோவில் – பாலூர் இடையே இணைக்கும் ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள தரைபாலம் நேற்று முன்தினம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது, தரைபாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ரெட்டிபாளையம், தேவனூர், பாலூர், குருவன்மேடு, கொளத்தாஞ்சேரி, கொங்கனாஞ்சேரி, மேலச்சேரி, கொளத்தூர், வெங்கடாபுரம், உள்ளிட்ட கிராம மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ரெட்டிபாளையம் தரைபாலம் வெள்ளத்தால் மூழ்கியதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்க்குள்ளாகியுள்ளனர் அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதில், 5 கிலோ மீட்டர் தூரத்தில் சிங்கபெருமாள்கோவில் செல்லும் நிலையில் தரைபாலம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதால் செங்கல்பட்டு வழியாக 25 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கன மழையின்போது வெள்ளத்தால் இந்த ரெட்டிபாளையம் தரைபாலம் தண்ணீரால் அடித்து செல்லப்பட்டது.
கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட தரைபாலம் இந்த ஆண்டு வெள்ளதால், பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. தரைபாலம் கட்டியும் எந்த பயனும் இல்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே இந்த ரெட்டிபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைத்து பொது போக்குவரத்து பாதிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
The post சிங்கபெருமாள்கோவில் – பாலூர் இடையே தண்ணீரில் மூழ்கிய தரைபாலம்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.