×

நெல்லூர் அருகே பயங்கரம்; திருநங்கைகளின் தலைவி வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு வலை

திருமலை: திருநங்கைகளின் தலைவியை கார்களில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொன்றது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொடவலூர் மண்டலம் தபதோபு கிராமத்தை சேர்ந்தவர் ஹாசினி (35), திருநங்கை. இவர் திருப்பதி, நெல்லூர் பகுதிகளை சேர்ந்த திருநங்கைகளுக்கு தலைவியாக இருந்து வந்தார். இந்நிலையில ஹாசினி நேற்று பர்லப்பள்ளி கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்றார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக கார்களில் வந்த மர்மநபர்கள் திடீரென ஹாசினியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இவர்களிடம் ஹாசினி தப்பியோட முயன்றார். ஆனால் மர்ம ஆசாமிகள் விரட்டிச்சென்று சரமாரி வெட்டி சாய்த்தது. பின்னர் அந்த கும்பல் கார்களில் ஏறி தப்பி சென்றது. படுகாயமடைந்த ஹாசினி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கொடவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் ஹாசினியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கைகளின் தலைவியை மர்ம கும்பல் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நெல்லூர் அருகே பயங்கரம்; திருநங்கைகளின் தலைவி வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Nellore ,Transgender ,AP ,Nellore District Godavalore Zone Dapadobu Village Hasini ,Tirupathi, Nellore ,
× RELATED ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே லாரி...