×

திருக்குறள் எழுதும் சாதனை நிகழ்வு

மதுரை, நவ. 21: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு, மதுரையில் திருக்குறள் எழுதும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமாரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு செ.வெ ரெக்கார்ட்ஸ் மற்றும் மதுரை ரயில்வே குடியிருப்பு மகளிர் சாதனையாளர்கள் இணைந்து திருவள்ளுவர் உருவ படத்தில் திருக்குறளை எழுதும் உலக சாதனை நிகழ்வு நேற்று நடைபெற்றது. இது, காலை 10.53 மணிக்கு தொடங்கி மதியம் 1.03 மணிக்கு நிறைவு பெற்றது. இதன்படி இரண்டு மணி நேரம் 10 நிமிடங்களில், 1330 குறள்களும் 3 முறை எழுதப்பட்டது. இதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெகார்ட் நிறுவனம் சாதனையாக பதிவு செய்கிறது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் சாதனை பெண் விருது வழங்கப்பட்டது.

The post திருக்குறள் எழுதும் சாதனை நிகழ்வு appeared first on Dinakaran.

Tags : Thirukkural ,Madurai ,Thiruvalluvar ,Kanyakumari ,Kanyakumari Thiruvalluvar idol ,jubilee ,S.V Records ,Madurai Railway ,Tirukkural writing achievement ,
× RELATED திருக்குறள் படத்தில் இளையராஜா