- கூலியாளாக
- திருவாரூர்
- பெரலம்
- திருவாரூர் மாவட்டம்
- பாலமுருகன்
- கலியத்துலர் கிராமம்
- குத்தாலம் தாலுகா,
- மயிலாதுதுரை மாவட்டம்
- ஜனனி
திருவாரூர், டிச. 12: திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே ரயில் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கலியத்துலார் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலமுருகன் (39). இவருக்கு திருமணமாகி ஜனனி (27) மற்றும் மகன் ஒருவர் இருந்து வரும் நிலையில் மனைவி ஜனனி பேரளத்தில் இருந்து வரும் தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் வந்த பாலமுருகன் மாலை 6 மணி அளவில் ஊருக்கு செல்வதாக மனைவியிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அன்று நள்ளிரவு 2.20 மணி அளவில் பேரளத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி ரயில் எஞ்சின் ஒன்று சென்ற நிலையில் பேரளம் அருகே வாஞ்சியாறு என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தை பாலமுருகன் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது ரயில் இன்ஜின் மோதி பாலமுருகன் இறந்தார். இது தொடர்பாக திருவாரூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் எதற்காக தண்டவளத்தை பாலமுருகன் கடக்கு முயன்றார். தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவாரூர் அருகே ரயில் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.