×

திருக்குறள் படத்தில் இளையராஜா

சென்னை: காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன் நிறுவனம், தற்போது ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படம் திருக்குறளின் பின்னணியில் திருவள்ளுவரின் வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகி வருகிறது. காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்
இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்த இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார். அத்துடன் இப்படத்திற்காக, சங்க இலக்கியச் சொற்களோடு, கவித்துவமும், பொருட்செறிவும் மிக்க இரு பாடல்களையும் எழுதியுள்ளார்’ என்றார்.

Tags : Tirukkural ,Chennai ,Ramana Communication Company ,Kamaraj ,Thiruvalluvar ,Thirukkural ,
× RELATED திருக்குறள் எழுதும் சாதனை நிகழ்வு