×

கந்தர்வகோட்டை பகுதிகளில் தைல மரங்கள் விற்பனை

 

கந்தர்வகோட்டை, டிச.12: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நன்று வளர்ந்துள்ள தைல மரங்களை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியங்களில் உள்ள விவசாயிகள் மானாவாரி யாகவும், சரளை மண் பகுதிகளிலும் தைல மரங்களை நடவு செய்து வளர்த்து வருகின்றனர்.இவ்வகை மரங்கள் மழை இருந்தாலும், இல்லாவிட்டாலும் வளரும் தன்மை கொண்டது. ஏக்கர் ஒன்றுக்கு நான்கு ஆண்டுகளில் 14 டன் முதல் இருபது டன் வரை மரங்கள் வெட்டலாம் எனவும் மேலும் முறையாக வாய்க்கால் அமைத்து நீர் பாய்ச்சி மரங்களை வளர்த்தால் நான்கு ஆண்டுகளில் 20 டன் முதல் 25 டன் வரை வெட்டலாம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

தைல மரங்கள் காகித ஆலைக்கும், செங்கல் சூளைக்கும் எரிபொருளாகவும் பெரும் அளவில் அனுப்பப்படுகிறது. தைல மரங்கள் வாழை மரத்திற்கு முட்டு மரமாகவும், சென்ட்ரிங் முட்டாகவும் அதிக அளவில் தேவை உள்ளதால் விவசாயிகள் தைல மரங்களை நடவு செய்ய முன் வருகின்றனர். கிராமபுறங்களில் கீற்று வீடு அமைக்க பெருமளவில் பயன்பெறுகிறது. தற்சமயம் டன் ஒன்று நான்கு ஆயிரம் முதல் ஆறு ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. விவசாயிகளுக்கு ஒரு லாபகரமான செலவற்ற சாகுபடியாக உள்ளதாக கூறுகின்றனர். மரங்களை விற்பனை செய்வதில் பல்வேறு முறைகளை கையாள்வதன் மூலம் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

The post கந்தர்வகோட்டை பகுதிகளில் தைல மரங்கள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kandarvakota ,Kandarvakota Union ,Kandarvakota Unions ,Pudukkottai District ,Manavari Yaga ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டை பகுதியில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி