×

துறையூர் நகராட்சியில் நகர் மன்ற சாதாரண கூட்டம்

 

துறையூர, டிச.12: துறையூர் நகர் மன்றத்தின் சாதராண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் சுரேந்திரா ஷா உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஜானகிராமன், செந்தில்குமார், அம்மன் பாபு, இளையராஜா, வீரமணிகண்டன், நித்யா, லலிதா, ஹேமா, முத்துமாங்கனி, அமைதிபாலு, சந்திரா, பெரியக்கா, லலிதா, தீனதயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகர் மன்ற கூட்டத்தில் நகர மன்ற தலைவர் 12.12.2024ல் பிறந்தநாள் காணும் பெரம்பலூர் எம்பி அருண் நேருக்கு வாழ்த்து தெரிவித்தார். கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

 

The post துறையூர் நகராட்சியில் நகர் மன்ற சாதாரண கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thadharyur municipality ,Dariyur ,Dariyur City Council ,president ,Selvarani Malarmannan ,Vice President ,Medical Murali ,Municipal Commissioner ,Surendra Shah ,Thariyaur ,Dinakaran ,
× RELATED துறையூர் அருகே பெண்ணை தாக்கி 9 பவுன் பறிப்பு