×

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தாயை தாக்கிய மகன் கைது

 

முசிறி, டிச.12:முசிறி அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே வேளக்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராசு மனைவி செல்லம்மாள் (65). இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் செல்லம்மாள் கணவர் கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை மகன் ஜெயவேல் கேட்டதால் எடுத்துக் கொடுத்துள்ளார். மகன் அதை செலவு செய்து விட்டு திருப்பித் தரவில்லையாம். கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட தாய் செல்லம்மாளை மகன் ஜெயவேல் தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த செல்லம்மாள் முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்லம்மாள் கொடுத்த புகாரின் பேரில் முசிறி எஸ்ஐ பரசுராமன் ஜெயவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தாயை தாக்கிய மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Musiri ,Rasu ,Chellammal ,Velakanantham ,Trichy district ,
× RELATED போலீசாருக்கு நன்றி தெரிவித்த பள்ளி மாணவ, மாணவிகள்