×
Saravana Stores

மழைநீர் தேங்குவதால் விபத்து அபாயம்

ராயக்கோட்டை, நவ.15: ராயக்கோட்டையில் சாதாரண மழை பெய்தாலும், கிருஷ்ணகிரி ரோடு, சூளகிரி ரோடுகள் மேடாக இருப்பதால், மழை நீர் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் முன்புள்ள குழியில் குளம் போல் தேங்கி விடுகிறது. அதனால் புதிதாக இந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள், குழிகள் இருப்பது தெரியாமல் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் எம்.சாண்டு போன்ற மண் கொட்டியும் பலனில்லை. எனவே, குழிகளை தார் மூலமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மழைநீர் தேங்குவதால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Krishnagiri Road ,Chulagiri Road ,Dinakaran ,
× RELATED கற்கள் கடத்திய லாரி பறிமுதல்