- தர்மபுரி
- கோவிந்தம்மாள்
- மணியம்பாடி
- பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா
- தர்மபுர
- கலெக்டர்
- சாந்தி
- பஞ்சாயத்து நிர்வாகம்
- தின மலர்
தர்மபுரி, டிச.3: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, மணியம்பாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (35), நேற்று தர்மபுர கலெக்டர் சாந்தியிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மணியம்பாடி கிராமத்தில், எங்கள் வீட்டிற்கு பின்னால் அதே பகுதியை சேர்ந்த பலர், குப்பைகளை கொட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகம், தினந்தோறும் குப்பைகளை அகற்றுவதில்லை. இதனால் அந்த தெரு முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தேள், பூரான், பாம்பு போன்ற விஷ ஜந்துகள் அடிக்கடி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. எங்கள் தெருவில் பலர், விஷ ஜந்துகளால் கடிபட்டுள்ளனர். எனவே, எங்கள் தெருவில் குப்பைகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் செல்வகமல், கருணாநிதி ஆகியோர், கலெக்டர் சாந்தியிடம் கொடுத்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி தாலுகா, வீரவநல்லூரைச் சேர்ந்த ஆசைத்தம்பி, அலெக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று கைது செய்ததோடு, இருவரையும் தாக்கி படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர். எனவே, போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கூறப்பட்டுள்ளது.
The post குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை appeared first on Dinakaran.